JustPaste.it

imresizer1716648342799.jpgCLICK TO READ

இடையிலேயே உடல் நலக்குறைவு என காரணம் சொல்லிவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு பயணமானாள்.மனது புண்ணாக வலித்தது.

     “ நான் ஏன் சார்?... அன்று உங்களை பார்க்கணும். எதுக்கு வந்தேணு கூட யோசிக்காம மொத்தமா என் வாழ்வையே மறந்து உங்களை காப்பாற்ற துடிக்கணும். சரி துடிச்சாலும் ஹாஸ்பிட்டல்ல சேர்த்ததோட என் பணி முடிஞ்சதுணு போகாம ஒரு நாள் முழுசும் உங்க கூட ஏன் இருக்கணும். உங்க துடிப்புல நான் ஏன் கலங்கணும்.

      “தெரியல சார்...தெரியல!...இன்னமும் தெரியல...உங்கள் வலியை உணர்ந்து என் கண்ணும் கலங்குச்சி. உங்கள் உயிர் போயிடக் கூடாதுணு என் உயிர் வரை வலிச்சிது.

      “டாக்டர் வந்து ஆப்ரேஷன் சக்ஸஸ் இனி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லணு சொன்ன பிறகு தான் எனக்கு உசுரே வந்துச்சு சார். அதுக்கு பிறகு தான் என் கோலமே உறைச்சிது ரத்த கரையோட இருந்த நான் ஒரு நர்ஸோட உதவியால குளிச்சி வேற டிரஸ் மாத்துனேன்.அன்று ஒரு வாய் சாப்பிடாம உங்க கூட இருந்தேன்.

      ஏன் சார்?...தெரியல சார். சத்தியமா தெரியல...

       “உங்களை விட்டு பிரிஞ்சி போனது வரை அது என்னணு எனக்கு தெரியல. ஆனா ஊருக்கு போன ஒவ்வொரு நொடியும் என் நினைப்பு உங்களையே சுத்தி சுத்தி வந்தப்ப தான் நமக்குள்ள எதுவோ இருக்குணு உணர முடிஞ்சிது சார். நீங்க சரியாகிட்டீங்களாணு என் மனசு தவிச்ச தவிப்பு உங்களுக்கு தெரியாது சார்...

         “உங்களை முழுசா ஒரு முறை பார்க்க மாட்டோமாணு என் ஏக்கம் உங்களுக்கு புரியாது சார்...நீங்க எனக்கானவன் தான் அதுனால தான் உங்களை என் மேல ஏற்றிய போது அருவருப்போ கூச்சமோ எனக்கில்லணு தோணுச்சு சார்.

     “ நீங்க தான் என்னில் சரிபாதிணு நினைச்சிட்டு உங்கள தேடித்தான் இந்த ஊருக்கே வந்தேன். ஆனா உங்களைப் பற்றி எதுவும் தெரியாம எங்க போய் தேட போறேணு ரொம்ப குழம்பி போயிட்டேன். போற இடங்களுல எல்லாம் என் கண்ணு எவ்வளவு ஆர்வமா தேடுச்சிணு உங்களுக்கு தெரியாது சார்.

      “ஆனா சத்தியமா இப்படி ஒரு இடத்துல உங்கள நினைச்சி பாக்கல சார்...தகுதிணு ஒண்ணு இருக்குல சார்.நான் உங்க பக்கத்துல நிற்க என்கிட்ட ஒரு தகுதி இருக்கா.சொல்லுங்க சார். அதுனால தான் என்ன உங்ககிட்ட காட்டிக்க தயங்குனேன். உங்க கூட பிரண்ட்ஷிப் வச்சிக்க முடியாம ஒதுங்குனேன். 

      “எங்க எந்த சூழல்லயாவது நீங்க என் மனசை தெரிஞ்சிட்டு என்னை வெறுத்திடுவீங்களோணு பயந்து தான் நீங்க பேச பேச ஒதுங்குனேன். நீங்க என் மேல வச்சிருக்கிற அன்புக்கு என் மனம் மண்டியிட்டிடுமோணு பயந்து தான் வார்த்தையால காயப்படுத்துனேன். ஆனா கடைசியில அதுவே உங்களுக்கு வலியா மாறும் போது என்னாலையே தாங்க முடியல சார்.

     “வலியோட இருக்கிற உங்க முகத்தையும் பார்க்க முடியல... நீங்க என்கிட்டயிருந்து ஒதுங்கிறத தாங்கவும் முடியல...எங்காவது போயிடலாம்ணா என் சுனி இல்லாம இருக்கவும் முடியாது. நான் என்ன செய்வேன் சார்.பேசாம நீங்க சுனி கூட போயிருக்கலாம் சார் போகாம பக்கத்துல இருந்துட்டு நரக வலியை கொடுக்கிறீங்க சார் தாங்க முடியல.

          “என்னைவிட்டு போயிடுங்க சார் உங்க காதலை தேடி போயிடுங்க. அன்பை இப்படி காட்டி என்னையும் ஏங்க வைக்காதுங்க.ரொம் கஷ்டமா இருக்கு. அதை நினைச்சி ஒதுங்க பார்த்தா இது என்ன சார் அவஸ்தை. முடியல சார். பிளீஸ் என்னை விட்டு ரொம்ப தூரமா போயிடுங்க.பிளீஸ்...

     மனதிற்கு அழுது கொண்டே வீடு வந்த வினோ டிரஸ் கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் சுருண்டு கொண்டாள். மனபாரமாக இருந்ததால் தலை விள்விள்ளென தெரிந்தது...அதே நேரம் வெளியில் குழலியின் குரல் கேட்டது.

      “என்னது இது...ஆபீஸ் நேரம் முடியும் முன்பே வீடு திறந்து கிடக்கிது...என்ன வினோம்மா வந்துட்டீர்களா?...

      என்றவாறு உள்ளே வந்தவள் அவள் நிலையை பார்த்ததும் பதறிப் போய்

       நெற்றியில் கை வைத்து பார்க்க...

       “எனக்கு எதுவுமில்ல குழலி...தலை தான் லேசா வலிக்குது.

       “எப்படித்தான் உங்க வலி பெங்களூர்ல இருக்கிற சுனி அம்மாவுக்கு தெரியுமோ. பத்து நிமிஷத்துக்கு முன்னால ஹால் பண்ணி உங்கள வந்து பார்க்கச் சொன்னாங்க...நான் கூட அவங்க ஆபீஸ் போயிருப்பாங்க. இந்த நேரம் ஏன் போக சொல்லுறீங்கணு கேட்டேன்.

      “முடியாம ஆபீஸ்ல்ல இருந்து கிளம்பியிருக்கா நீ போய் பாரு. நான் பேசினா எதுவும் இல்லணு சமாளிச்சிடுவா நீ பார்த்து எனக்கு போண் பண்ணுணு சொன்னாங்க.

       “அப்படியா சொன்னா!...கம்பெனிக்கு போண் பண்ணியிருப்பா. நான் இடையில கிளம்பி வந்ததை சொல்லியிருப்பாங்க. அதான் உனக்கு போண் அடிச்சிருப்பா.

       “சரி...நீங்க படுத்திடுங்க. நான் தலைவலி தைலம் தடவி விடுறேன்.

      “வேணாம் குழலி. நீ வேற மாசமா இருக்கா. இந்த நேரம் இவ்வளவு தூரம் எதுக்கு வந்தா. என்ன நான் பாத்துக்க மாட்டேனா...

     ...ம்...மாசமா இருந்தா வீட்டுலயேவா அடஞ்சிகிடக்க முடியும். அது வேற ஒத்த வேலை செய்ய விடுறதில்ல...சும்மா உட்கார்ந்து உட்கார்ந்து சோம்பல் தான் கூடி போச்சு.நல்ல வேலை சுனியம்மா போண் அடிச்சதும் ஓடி வந்துட்டேன்.

     என்றவாறு தைலம் எடுத்து வந்து நெற்றியில் நீவி விட்டது. கசாயம் போட்டு வந்து குடிக்க வைத்தது.

    இரவு வெகு நேரம் கூட இருந்து கவனித்துக் கொண்ட குழலி இரவு 9 மணிக்கு தான் கணவர் வந்து அழைக்க கிளம்பி போனாள்.

    அவள் சென்ற பத்தாவது நிமிடம் சுனியிடமிருந்து போண் வந்தது.

       “என்னடியாச்சு?…”

       ஏ...பதற்றப்படாத...எனக்கு எதுவுமில்ல… “

      எதுவுமில்லாமலா...ஆபீஸ்ல்ல இருந்து பாதியில கிளம்பி வந்தா...

       லேசா தலைவலிடி...அவ்வளவு தான்...

     வேற யாராவது ஏமாத்த அப்படி சொல்லு. எனட்ட உண்மையை சொல்லு. கம்பெனியில எதுவும் பிரச்சினையா... எதுவும் தப்பா பண்ணிட்டியா?...

     “இல்லடி…”

    ப்புறம் ஏன் விக்ரம் சார் உன் மேல கோபமா இருக்காரு.

     “கோபமாவா?...அது எப்படி உனக்கு தெரியும்.

    ...ம்...தெரியும்...நீயும் சரியில்ல. சாரும் சரியில்லணு வரை

தெரியும்...என்ன நடந்துச்சு.

     ஒண்ணுமில்லடி…”

     சொல்ல மாட்டாநானே ஆபீஸ்ல கேட்டு தெரிஞ்சிக்கிறேன். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். நீ ஆபீஸ்க்கு புதுசுலடா முதல்ல திணறலா தான் இருக்கும். தப்பு பண்ணும் போது கோபத்துல பாஸ் எதுவும் சொல்லுவாரு தான். அதையே பெரிசுபடுத்திட்டு கோபமா இருக்காத...விக்ரம் சார் ரொம்ப நல்லவரு. ஏதாவது காரணம் இல்லாம கோபப்பட மாட்டாரு. அதுனால மனசுல எதையும் ஏத்திட்டு கவலைபட்டுட்டு இருக்காதா...சரியா?...”

     ..ம்...ம்...

      “சரி... தூங்கு. காலையில மனசு தெளிவா இருக்கும். நான் வைக்கிறேன்.

     என்றவள் வைத்ததும் பல நிமிடம் செல்லை காதிலே அப்படியே வைத்துக் கொண்டே இருந்தாள் வினோ.

        மறுநாள் காலை ஆபிஸ்க்கு போகும் போதே விக்ரம் அறையை பார்த்தாள். விக்ரம் இல்லாமல் வெறுமையாய் இருந்தது அறை.     

     பெருமூச்சு ஒன்றை விட்டவாறு தன் அறைக்கு வந்தாள். மதியம் வரை யாரும் அவளை அழைக்காததும் வர சொல்லாததும் பியூன் கூட தன் அறையை எட்டி பார்க்காததும் வித்தியாசமாகப்பட எழுந்து வெளி வந்தாள். மதியம் ஆகியும் விக்ரம் அறைக்கு வரவில்லை.

      பியூண் தணிக்காசலமும் எந்த வேலையும் இன்றி தூங்கிக் கொண்டிருந்தான். மேனேஜர் நல்ல சிவம் மட்டும் தன் அறையில் இருந்தார்.

      காலையிலேயே அவர் முடிக்க சொன்ன சில பைல்ஸோடு அவர் அறைக்குள் நுழைந்தார்.

      முடிச்சிட்டீங்களா மேடம்…”

      ஆமா சார்…

      “சரிஇதுல வைங்க. நான் செக் பண்ணிட்டு கால் பண்ணுறேன்.

     “ ..ம்.. சரி…”

என்றவள் திரும்பி வாசலை நோக்கி இரண்டடி வைக்க...

     மேடம்சாரோட ஒர்க் கொஞ்சம் இருக்கு. அவங்க உங்களுட்ட கொடுக்க சொன்னாங்க. முடிஞ்சா பாருங்களேன்.

     என்றதும் திரும்பி வந்து அந்த பைலை எடுத்துக்கொண்டு கிளம்பியவள் வழியில் பியூணை நிறுத்தி...

     “விக்ரம் சார் எங்க...எனக்கு சில பேப்பர்ஸ்ல சைன் வாங்கணும்.

     “சார் இன்று வர மாட்டாங்க. நாளைக்கு பாருங்க மேடம்...

     “ஏன்?...ஏதாவது மீட்டிங் போயிருக்காங்களா...

    இல்ல மேடம் சாரோட உடல்நிலை சரியில்ல. காலையில டாக்டர் வந்து பார்த்திட்டு இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காரு. அதான் மாடியில ஓய்வெடுத்திட்டு இருக்காங்க...

        உடல் நிலை சரியில்லை என்றதுமேஅவள் மன் அவளையும் அறியாமல் சட்டென மாடிக்கு தாவ...

     !...என்றவள் மறு பேச்சு பேசாமல் தன் அறையில் வந்து பணியை தொடங்க. மூளையும் மனதும் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்ய மறுத்தது. உடல்நிலை சரியில்லை என்றார்களே என்ன செய்யுது என்ற எண்ணம் மேல் ஒங்கி நின்றதால் பணியில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள். ஆனாலும் மனதை அடக்கிக் கொண்டு மாலை வரை இருக்க முடிந்தவளால் அதற்கு மேல் இருக்க முடியவில்லை.

      ஆபீஸ் முடிந்ததும் நேரே மேல் மாடிக்கு வந்தாள். ஹாலிங்பெல்லை அழுத்த... வந்து திறந்தது ஒரு வயோதிக பாட்டி..

     “சாரை பார்க்கணும்…”

     “அவர் இப்ப தான் தூங்க போனார். நீங்க அப்புறம் வந்து பாக்குறீங்களா...

      “இல்லநான் வினோ வந்திருக்கேணு சொல்லுங்க. அவர் உடனே உள்ளால் கூப்பிடுவாங்க.

     என்றதும் உள்ளே சென்ற பாட்டி அடுத்த நிமிடமே வெளிவந்து...

     “நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம்ணு சொல்லுறாங்க...

    என்றதும் கடுப்பான மனதை வெளிகாட்டிக் கொள்ளாமல் விடுக்கென திரும்பி நடந்தாள். உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது.  

      “அன்று அப்படி என்ன சொல்லிவிட்டேன் ரோட்டை பார்த்து ஓட்டுங்க...இல்லணா அன்று போல ஏதாவது ஒரு பொண்ணு உதவிக்கு வரும். அப்புறம் இந்த பொண்ணை தேடுறதுக்கு பதில் அந்த பெண்ணை தேடுவீங்கணு தானே சொன்னேன். இதுல அப்படி என்ன தப்பு இருக்கு.

      இருந்தாலும் ரொம்ப பெரிய கோபம் தான். கோபம்ணா இருக்கட்டும். எனக்கென்ன... அவரை பார்க்கலணா என்னால இருக்க முடியாதா. நானும் இருப்பேன். இனி நாம வலிய போய் பேசக்கூடாது...”. என கோபத்தில் முடிவெடுத்து ஒரு இரண்டு மணி நேரம் ஆகியிருக்காது.

     வினோவின் செல் அலறியது

 எடுத்தவள் சுனி என்றதும்

 முகம் மலர்ந்தவளாய்...

     “என்னடி...ஆபிஸ் முடிஞ்சிடுச்சா...

     “..ம்..ம்.. வினோ.. நீ உடனே நம்ம ஆபீஸ்க்கு கிளம்பி போ.

    ஆபிஸ்க்கா!...இந்த நேரமா?...

    ஆமா...உடனே கிளம்பி போ. அங்க விக்ரம் சார் ரொம்ப முடியாம இருக்காங்க...

    அவர் முடியாம இருக்கிறதுக்கு என்ன எதுக்கு போக சொல்லுறா?...

     “வினோ...என்னடி பேசுறா?...முதல்ல பேசுறது நீ தானா.... என்னடியாச்சுடி உனக்கு.

   எதுவும் ஆகல. உன் பாஸ்க்கு முடியலணா என்ன எதுக்கு போக சொல்றா...

   அவர் உனக்கு பாஸ்டி...

   அதுக்கு தான் கம்பெனியில ஒர்க் பண்ணி கொடுக்கிறேன்ல இப்படி நைட் போக வேண்டிய அவசியம் இல்ல.

    நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு. உங்க ரெண்டு பேருக்கும் அப்படி என்னடி கோபம்...என்ன சண்டை நீயாவது சொல்லி தொலை.

     “ஏன் அதை உன் பாஸ்ட்டயே கேட்டு தெரிஞ்சிக்க. நான் எதுவும் தப்பா பேசல...

     “ சரி...நீ தப்பா பேசுனியோ? அவர் தப்பா நினைச்சாரோ?. தெரியல...எதுனால முதல்ல நீ அவரை போய் பாரு. ரொம்ப பலகீனமா பேசுறாரு.பேசக்கூட முடியல...ஹாஸ்பிட்டல் போங்கணு சொன்னதுக்கும் கேட்கல.இந்த நேரம் வரதன் கூட பெரிய முதலாளி வர சொன்னார்ணு போயிட்டான். இரண்டு நாள் சேட்டர் டே சண்டேனால மேனேஜரும் பெங்களூர் வந்துட்டாங்க.இப்ப நீ ஒருத்தி தான் அங்க இருக்கா.உன் கோபத்தை மூட்டை கட்டி வச்சிட்டு போய் பாரு.

      “ஐயோ நம்ம பாஸ் முடியாம கிடக்கிறாங்களே என்ன செய்யுதுணு கேட்கலாம்ணு போனா...பார்க்க முடியாது நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம்ணு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிவிட்டாரு. இப்ப என்னை உள்ளால கூப்பிடுவாருணு நினைக்கிறியா?...”

      “ஐயோ வினோ...அவரால பேசக்கூட முடியலணு சொல்றேன். நீ என்ன வாக்குவாதம் பண்ணிட்டிருக்கா.

     ஆமா...அப்படித்தான் பண்ணுவேன். என்னால போய் பார்க்க முடியாது. வேணா காளி அண்ணாவையும் பொன்னம்மா பாட்டியையும் அனுப்புறேன்.

     “என்னடியாச்சு உனக்கு. தெரியாதவங்க ஒருத்தர் முடியலணு சொன்னாலே துடிச்சி போவா. இப்போ நமக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிற சாமி. அவரை போய் பாருணா வேலைக்காரியை அனுப்புறேன்ணு சொல்லுறா. தப்பு பண்ணுறா வினோ. தப்பு பண்ணுறா.உன் கேரட்டரே சுத்தமா மாறுனது போல பேசுறா. இது நல்லதுக்கில்ல...நான் வைக்கிறேன். பாத்து பண்ணு.

      என சுனி வைக்க...இதுவரை தீச்சுவாலை போல் சுழன்றடித்த கொண்டிருந்த கோபம் மட்டுபட நெற்றியில் கை கொடுத்து சிறிது நேரம் அப்படியே இருந்தாள்.

     பின் அவசரமாக புறப்பட்டு ஆபீஸ்க்கு வந்தாள். மாடிபடி ஏறினாள். வெளியில் இருந்து பல முறை கூப்பிட்டும் உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. ஹாலிஸ்பெல்லுக்கும் எந்த ரெஸ்பாண்ஸ்பிள்ளும் இல்லை. பலமுறை கதவை அடித்து பார்த்தாள். அது திறக்கவே இல்லை.

      திடீரென ஒரு யோசனை தோன்ற கதவின் கொண்டியை திறக்க அது வழி விட்டது. மெதுவாக உள்ளே வந்தாள். இரவு வெளிச்சத்தில் அறை ரம்மியமாக இருந்தது. உள் இரண்டு அறை இருந்தது. ஒன்றை திறந்தவள் காலியாக இருக்க கண்டு அடுத்த அறைக்கு போனாள்.  

      பக்கத்தில் சென்றதுமே விக்ரமின் முனங்கல் சத்தம் கேட்டது. தீனமான அவன் குரலை கேட்டதுமே அவள் அடி வயிறு கலங்கியது. ஓடி அவன் அருகில் வந்தாள். சூட்டின் உஷ்ணத்திலும் குளிரின் தாக்கத்திலும் நடுங்கிக் கொண்டிருந்தான் விக்ரம்.     

     படபடத்த நெஞ்சோடு அவன் அருகில் வந்தவள் நடுங்கும் கையை அவன் நெற்றியில் வைக்க... நெருப்பாய் கொதித்தது உடம்பு.

    இதுவரை அவனிடம் இருந்த கோபம் விடை பெற பஞ்சாய் பறக்க...அவனின் நிலை கண்டு துடித்து போனாள் வினோ.

 

 

                                      அத்தியாயம் தொடரும்...

 

CLICK TO READ