JustPaste.it

kaliyuga thirpu/ Chapter-1/Tamilnovels

2014 டிசம்பர் 1-ம் தேதி.

    

மலையடிவாரத்தை ஒட்டிய ஒரு சவுக்கு தோப்பு.. அந்த சவுக்கு தோப்பில் மனித நடமாட்டமே பகலில் கூட இருப்பது இல்லை.மரங்கள் அடர்ந்து அணிவகுத்து நின்றதால் நடுபகல் கூட இருளை தாங்கி தான் நின்றது.  மெல்லிய வெளிச்சத்தோடு அடர்ந்த மரங்களுக்கு நடுவில் அவ்விடம் பயமுறுத்தி  நின்றது. தென்றல் கூட அடர்ந்து நின்ற மரக்கிளைகளில் மோதி மோதி ஒரு விதமான இரச்சலை உண்டு பண்ண…அந்த இடம் ஒரு கயவர்களின் கூடாரம் போல் காட்சி தந்தது.

    

       அந்த சவுக்கு தோப்பின் முடிவில் அடர்ந்த காடு. அந்த காட்டில் இருந்து வந்த சில விலங்கினங்கள் யாரோட இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக அந்த இடத்தில் சுற்றி திரிந்தன. அந்த இடத்தில் அடர்ந்து நின்ற சவுக்கு மரத்திற்கு மையப் பகுதியில் ஒரு பெரிய பாறையும்... அப்பாறையை ஒட்டி ஒரு நீர் ஊற்றும்... அந்த ஊற்றிலிருந்து மெல்லிய நீர் வாய்கால் வழி பாய்ந்தும் கொண்டிருக்க…

 

    அந்த பாறையின் மறுபக்கம்...நெருங்கி நின்ற நாலு சவுக்கு மரத்திற்கு நடுவில் ஒரு சமரசமான பகுதியின் மேல் ஈக்கள் மோய்க்க... மொத்தமாய் உருக்குலைந்து போய் கிடந்தது ஒரு பெண்ணின் உருவம். ஆடைகள் அனைத்தும் அலங்கோலமாய் படுகவர்ச்சியாய் தெரிந்தாலும் மனசாட்சி உள்ள எந்த மனிதனாலும் அதை ரசிக்க முடியாத அளவு அந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருந்தன.

 

    அந்த உடம்பில் ஏழு எட்டு இடத்தில் கத்தி குத்தும் இருந்தது.. அந்த காயங்களில் இருந்து வழிந்தோடிய இரத்தம் உடல் முழுவதும் பரவி விரவி  நின்றன. அடிவயிற்றில் விழுந்த குத்து உள் உறுப்பான குடலையே வெளியேற்றி இருந்தது. அந்த உடலில் எந்த அசைவும் இல்லை. இரத்தம் பல இடத்தில் உறைந்து போயிருப்பதை பார்த்தால் நிச்சயம் சம்பவம் இப்போது நடந்தது இல்லை. நேற்று நடந்திருக்க வேண்டும் என்று தான் தோன்றியது. உயிர் இருப்பது போல் தெரியவில்லை. பிணம் போல் அசைவற்று தான் கிடந்தது.

 

    வயது ஒரு இருபது இருபத்தொன்று இருக்கலாம். செக்க சிவந்த தேகம். நிச்சயம் காண்போரை கவர்ந்திழுக்கும் அழகோடு தான் இருந்திருக்கிறாள். ஒரு வேளை அவளை அந்த அழகு தான் இந்த நிலைக்கு ஆளாக்கியதோ… சிரிப்பை தொலைத்த அவளின் காய்ந்து போன உதடு கூட படு கவர்ச்சியாய் தான் தெரிந்தது. ஆனால் கழுத்து பகுதியில் ஏற்பட்ட குத்தால் முகம் முழுவதும் இரத்தம் உறைந்திருந்தது.

 

CLICK HERE TO READ FULLY

 

digitalmarketingagencyinstagrampost.jpg