ஹாய் பிரண்ட்ஸ்
நான் உங்கள் செல்வம். இது கலியுக தீர்ப்பு.இந்த காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த நாவலை நான் எழுதி இருக்கிறேன்.
டிஜிட்டல் உலகம் நம் கண் முன்னால் விரிந்து கிடக்கிறது. அது இளம் தலை முறையினரை பாதித்தும் இருக்கிறது. ஃபேக் ஐடி மூலம் தொடர்பு கொண்டு இன்று பல தவறுகள் சர்வசாதாரணமாக நடந்தேறி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் துயர காவியமே என்னுடைய கலியுகத்தீர்ப்பு. பல கயவர்களால் தன் பெண்மையை இழந்து மொத்தமாய் உடல் சிதைந்து போய் கோமா நிலைக்கு நம் கதாநாயகி போன பிறகு அவளின் இந்த நிலைக்கு காரணமான குற்றவாளியை தேடுகிறது போலீஸ் துறை.
அப்போது காவல்துறை கண்டுபிடிக்கும் சில உண்மைகளும், அதை தொடர்ந்து குற்றவாளியே தான் பேக் ஐடி மூலம் தொடர்பு கொண்டு காதலித்து கடைசியில் அவளை இந்த நிலைக்கு மாற்றியதை ஒப்புக்கொண்டு சிறை சென்ற பின்,... அந்த ஊரில் நடக்கும் பெரிய புள்ளிகளின் அடுத்தடுத்த மரணமும், அந்த மரணம் நடக்க காரணமுமாக கதை விரிகிறது.
உண்மையில் அவர்களை மர்மமான முறையில் கொலை செய்பவர் யார்? அவருக்கும், கோமாவில் இருக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? கொலையாளி குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறை சென்ற பின் எதனால் அந்த கொலைகள் நடக்கிறது. இத்தனை கேள்விக்கும் விடையாக அமைந்தது தான் என் கலியுகதீர்ப்பு. பெண்களின் உயிர்மேலும் உடல் மீதும் விளையாடும் அத்தனை வக்ரகம் பிடித்த ஆண்களுக்கும் சாட்டை அடியாய் நான் கொடுக்கும் தீர்ப்பு தான் கலியுக தீர்ப்பு.
நாவலை முழுசா படிங்க. புடிச்சிருந்தா ஸ்டார் கொடுத்து கமெண்ட் கொடுத்து தெரிவிங்க. புடிக்கலனா கூட உங்க கருத்தை எனக்கு சொல்லலாம் உங்களின் விமர்சனத்திற்காக காத்திருப்பது…
உங்கள் எழுத்தாளர்
எல் ஞான செல்வம்