JustPaste.it

Tamil Cinema News Online - Actor Vijay

User avatar
UpdateNews @UpdateNews · Jul 1, 2020

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரும் பேட்டி கொடுத்து வருகிறார்கள். பொதுவாகவே குணச்சித்திர நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. மணிவண்ணன், நாசர் தொடங்கி ஜெயபிரகாஷ் வரை இவர்களது நடிப்பு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும், ஹீரோவாகவும் நடித்தவர் தான் நெப்போலியன்.

 

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பல சுவாரஸ்யமாக விஷயங்களை பேசி இருந்தார் நெப்போலியன். அதில் ” நடிகர் விஜயிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவதில்லை, அவருடைய படங்களையும் பார்ப்பதில்லை” என்று நடிகர் நெப்போலியன் ஒரே போடாக போட்டுவிட்டார் .

அப்படி என்ன தான் விஜய்க்கும் நெப்போலியனுக்கும் பிரச்னை என்று பார்த்தால், நடிகர் நெப்போலியனின் நெருங்கிய நண்பர்கள் சிலர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். நெப்போலியன் போக்கிரி படத்தில் நடிக்கும் நேரத்தில் விஜயுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நெப்போலியன் நண்பர்கள் ஆசைப்பட, ” அவ்ளோ தானே, வாங்க போலாம்” என்று அவர்களை விஜய்யை பாரக்க அந்த போக்கிரி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

நெப்போலியன் விஜய்யை சந்திப்பதை பற்றியும், அவர்களை அறிமுகப் படுத்துவதை பற்றியும், விஜய்யிடம் எந்த அறிவிப்பும் நெப்போலியன் கொடுக்கவில்லை. வந்தவுடன் விஜய்யின் கேரவேன் கதவை திறந்துள்ளார். வழக்கமாக எல்லா பெரிய ஹீரோக்களின் கேரவனுக்கும் ஒரு பாதுகாவலர் இருப்பார்.

அது போல், விஜயின் கேரவேன் அருகே இருந்த பாதுகாவலர் நெப்போலியனை தடுத்து, சராமாரியாக கேள்விகளை கேட்டுள்ளார். இதனால், நண்பர்கள் முன்னிலையில் அவமானப்பட்ட நெப்போலியன், அந்த பாதுகாவலருடன் கை கலப்பில் அந்த இடமே பரபரப்பானது.

இந்த சத்தத்தை தாங்க முடியாமல், விஜய் கேரவேனுக்கு வெளியே வரவே, உடனே நெப்போலியனிடம் “சார், உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா ? என்று வயது வித்யாசம் பார்க்காமல் நெப்போலியனிடம் கோபமாக பேசியுள்ளார்.

இந்த கோபமான பேச்சு நெப்போலியன் நண்பர்கள் முன்னிலையில், நெப்போலியனுக்கு அவமானமாக போய்விட்டது. இதுவே இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்று ஒரு வீடியோ இன்று இணையதளத்தில் வைரலாக உலவிக் கொண்டிருக்கிறது.